\
“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்

“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்

“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்
Published on

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் உரை நிகழ்த்துவதில் வல்லவர். அவரது சொற்பொழிவு பார்ப்போரையும், கேட்போரையும் கட்டிப் போடும். உணர்ச்சிமிகு பேச்சுகளுக்கு சொந்தக்காரர். மக்களவை உறுப்பினராக பொறுப்பேற்று வாஜ்பாய் ஆற்றிய உரை இன்றும் பலரால் நினைவு கூறப்படுகிறது. பாரதிய ஜன சங்க நிறுவனர் ஷ்யாம பிரசாத் மொகர்ஜி ஒருமுறை காஷ்மீர் கிளம்பினார். அவரது உதவிக்காக சென்றார் வாஜ்பாய். முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட் பெற்றுக் கொண்டு இருவரும் ரயிலில் கிளம்பினார்கள். ஆனால் அரசோ மொகர்ஜியை கைது செய்ய உத்தரவிட்டது. அதனை அடுத்து அவரும் கைது செய்யப்பட, காஷ்மீரை ஏன் இந்தியாவோடு முழுமையாக இணைக்க வேண்டும் என்ற தனது நோக்கத்தை வாய்பாயிடம் சொல்லி அனுப்பினார்.

வார்த்தைகளை வேத வாக்காக கொண்டு இந்தியா முழுக்க சுற்றினார் வாஜ்பாய். பல இடங்களில் உரை நிகழ்த்தினார். அனல் பறந்த பேச்சுகள் அவை. பலரும் இந்த விவகாரத்தை கவனிக்க தொடங்கினார்கள். தேர்தல் வந்தது. போட்டியிட்டார். மக்களவைக்கு சென்றார். முதல் உரை. காங்கிரஸ் அரசை கடுமையாக சாடினார். அது போன்ற ஒரு உரையை நாடாளுமன்றம் முன்னர் கண்டதில்லை என்னும் அளவுக்கு இருந்தது அவரது உரை. அனைத்து மக்களவை உறுப்பினர்களும் , கட்சி பேதமின்றி வாஜ்பாயை பாராட்டினார்கள். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com