உபியில் பாஜக ஆட்சி.. அயோத்தியில் ராமர் கோவில்: அமித்ஷா

உபியில் பாஜக ஆட்சி.. அயோத்தியில் ராமர் கோவில்: அமித்ஷா

உபியில் பாஜக ஆட்சி.. அயோத்தியில் ராமர் கோவில்: அமித்ஷா
Published on

உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் எனவும், அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் எனவும் பாஜக தலைவர் அமித்ஷா கூறினார்.

உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய அமித்ஷா, கடந்த 15 ஆண்டுகளாக உத்தரப்பிரதேசத்தை ஆண்ட பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாதிக் கட்சியும் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். ஒருவர் மாநிலத்தைக் கொள்ளையடிப்பதாகவும், மற்றவர் நாட்டையே கொள்ளையடிப்பதாகவும் சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் ஆகியோரை அவர் விமர்சித்தார். உ.பி.யில் பாஜக மூன்றில் ஒரு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும். அவ்வாறு பாஜக ஆட்சியமைக்கும் நிலையில் அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என்றும் அமீத்ஷா நம்பிக்கை தெரிவித்தார்.

நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேச சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 11 முதல் மார்ச் 8 வரை 7 கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் சமாஜ்வாதிக் கட்சியுடன் இணைந்து காங்கிரஸ் கட்சி களம் காண்கிறது. இது பாஜகவுக்கு மிகப்பெரும் நெருக்கடியைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com