\
ஓணம் சிறப்பு பூஜைக்காக சபரிமலை கோயில் நடை செப். 2ல் திறப்பு

ஓணம் சிறப்பு பூஜைக்காக சபரிமலை கோயில் நடை செப். 2ல் திறப்பு

ஓணம் சிறப்பு பூஜைக்காக சபரிமலை கோயில் நடை செப். 2ல் திறப்பு
Published on: 

ஓணம் சிறப்பு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை செப்டம்பர் 2ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

செப்டம்பர் 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை 4 நாட்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பு ஓணம் விருந்து வழங்கப்படுகிறது. 19 வகை கூட்டுப் பொரியலுடன் 2,500 பேருக்கு சபரிமலை மேல்சாந்தி உன்னிகிருஷ்ணன் சார்பில் விருந்து வழங்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து கோயிலில் தினமும் காலையில் 5.30 மணி முதல் 9.30 மணி வரை நெய் அபிஷேகம் நடைபெற்று சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. செப்டம்பர் 6 ஆம் தேதி இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும் என்றும் சபரிமலை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com