\
போதையில் போலீசிடம் தகராறு செய்த பெண் - வைரலாகும் வீடியோ

போதையில் போலீசிடம் தகராறு செய்த பெண் - வைரலாகும் வீடியோ

போதையில் போலீசிடம் தகராறு செய்த பெண் - வைரலாகும் வீடியோ
Published on

ஐதராபாத்தில் குடிபோதையில் காவல்துறையிடம் பெண் ஒருவர் தகராறு செய்த காட்சிகள் வெளியாகியுள்ளது. 

ஐதராபாத்தின் முக்கிய சாலை ஒன்றில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வாகனம் ஒன்றினை சோதனை செய்த போது, அதனை ஓட்டியவர் குடிபோதையில் இருந்தது போலீசாரால் கண்டறியப்பட்டது. அப்போது, காரை ஓட்டியவருக்கு அருகில் அமர்ந்திருந்த மற்றொரு பெண் வெளியே இறங்கி போலீசாருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். கிட்டத்தட்ட அந்த வாகன சோதனையின் போது 5க்கும் மேல் போலீசார் இருந்தனர். ஆனால், அந்தப் பெண் அங்கும் இங்கும் ஓடி போலீசுடன் வாக்குவாதம் செய்தார். போலீசின் முகத்துக்கு நேராக கையை நீட்டி வேகாமக பேசியுள்ளார். ஒரு கட்டத்தில் கல்லை எடுத்தே அடிக்கச் சென்றார். 

போலீசாருடன் குடிபோதையில் பெண் தகராறில் ஈடுபடும் அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், “வாகனத்தை ஓட்டி வந்த பெண் அளவுக்கு அதிகமாக மது அருந்தி இருந்தார். அதனால் அவர் மீது நாங்கள் வழக்குப் பதிவு செய்துள்ளோம். தகராறு செய்த பெண் மீது வழக்குப் பதிவு செய்யவில்லை” என்றனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com