\
''வள்ளுவரின் கோட்பாடுகள் அறிவுசார் ஆழத்திற்காக தனித்து நிற்கின்றன'' - பிரதமர் மோடி ட்வீட்

''வள்ளுவரின் கோட்பாடுகள் அறிவுசார் ஆழத்திற்காக தனித்து நிற்கின்றன'' - பிரதமர் மோடி ட்வீட்

''வள்ளுவரின் கோட்பாடுகள் அறிவுசார் ஆழத்திற்காக தனித்து நிற்கின்றன'' - பிரதமர் மோடி ட்வீட்
Published on

திருவள்ளூவர் தினைத்தையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ''திருவள்ளுவர் தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது கோட்பாடுகள் அறிவுத்திறன்மிக்க நடைமுறைக்கேற்றவை. பன்முகத்தன்மை & அறிவுசார் ஆழத்திற்காக அவை தனித்து நிற்கின்றன. கடந்த ஆண்டு நான் கன்னியாகுமரியில் எடுத்த திருவள்ளுவர் சிலை & விவேகானந்தர் நினைவகத்தின் காணொலியை பகிர்கிறேன்'' என்று பதிவிட்டுள்ளார்.

இதனிடையே தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மெரினா கடற்கரையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டு இருந்த திருவள்ளுவர் படத்திற்கு மரியாதை செலுத்தினார். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திருவள்ளுவர் படத்திற்கு மரியாதை செலுத்தினார். அமைச்சர் தங்கம் தென்னரசு திருவள்ளூவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com