‘மன் கி பாத்‘ நிகழ்ச்சியில் கோவை சிறுமியை பாராட்டிய பிரதமர் மோடி

‘மன் கி பாத்‘ நிகழ்ச்சியில் கோவை சிறுமியை பாராட்டிய பிரதமர் மோடி

‘மன் கி பாத்‘ நிகழ்ச்சியில் கோவை சிறுமியை பாராட்டிய பிரதமர் மோடி
Published on

'உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்க நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்' என்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். அத்துடன் கோவை சிறுமியின் செயலுக்கும் பாராட்டு தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி அகில இந்திய வானொலியில், ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமையில், ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சி வழியே மக்களுடன் உரையாடி வருகிறார். அதன்படி, 72வது முறையாக இந்த ஆண்டின் கடைசி  ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார்.

இன்றைய நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:- இன்றைய நிகழ்வில் கடந்த ஆண்டின் அனுபவங்களும், 2021ம் ஆண்டிற்கான உறுதிமொழிகளும் உள்ளது. உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம் என்ற குரல் வீடுதோறும் எதிரொலிக்க துவங்கிவிட்டது. நமது பொருட்கள் உலகத்தரம் வாய்ந்தவையாக இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். இதற்கு நமது, உற்பத்தியாளர்களும், தொழில்முனையும் நண்பர்களும் முன் வர வேண்டும். 'ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் முன்வரவேண்டும். இதுவே உற்பத்தியாளர்கள், தொழில்துறையினருக்கு நான் விடுக்கும் வேண்டுகோள்.

பொதுமக்கள், அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் அந்நிய பொருட்களுக்கு மாற்றாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, இந்தியர்களின் உழைப்பில் உருவாக்கப்பட்ட பொருட்களை பயன்படுத்துவோம் என முடிவு செய்வோம். இந்த முறை நமது தேசத்தின் பொருட்டு நாம் கண்டிப்பாக இப்படி ஒரு உறுதியை மேற்கொள்வோம்.

நாம் மனிதர்களை சுமக்கும் சக்கர நாற்காலிகளை பார்த்துள்ளோம். ஆனால், கோவையை சேர்ந்த காயத்ரி என்ற சிறுமி, தனது தந்தையுடன் இணைந்து பாதிக்கப்பட்ட ஒரு நாய்க்காக ஒரு சக்கர நாற்காலி ஒன்றை வடிவமைத்துள்ளார். அனைத்து உயிர்களிடத்தும் தயவும், கருணையும் மனதில் நிறைந்திருந்தால் மட்டுமே இப்படி ஒருவரால் செய்ய முடியும்.

நாம் குப்பையை ஏற்படுத்த மாட்டோம் எனவும், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருளில் இருந்து நாட்டை விடுவிக்க வேண்டும் என உறுதியேற்போம். இதையே புத்தாண்டுக்கான வாழ்த்துகளாக தெரிவித்து கொள்கிறேன்''. இவ்வாறு பிரதமர் பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com