\
4 வயதுச் சிறுமிக்காக காரை நிறுத்திய மோடி

4 வயதுச் சிறுமிக்காக காரை நிறுத்திய மோடி

4 வயதுச் சிறுமிக்காக காரை நிறுத்திய மோடி
Published on

4 வயது சிறுமிக்காகக் காரை நிறுத்தி பரபரப்பை ஏற்படுத்தினார் பிரதமர் மோடி.

குஜராத் மாநிலம் சூரத் நகருக்கு 2 நாள் பயணமாக சென்ற பிரதமர் மோடி, மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு சூரத் விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் பிரதமர் மோடியை காண சாலையின் இருப்பக்கமும் மக்கள் கூடி இருந்தனர். அப்போது மோடி காரை நோக்கி 4 வயது சிறுமி ஒருவர் வந்தார். அவரை பாதுகாப்பு வீரர்கள் நிறுத்தினர். அதனை பார்த்த மோடி, தனது காரை நிறுத்தி சிறுமியை அழைத்து சில நிமிடங்கள் பேசினார்.

இந்தச் சம்பவத்தால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதே போல் வங்கதேசப் பிரதமர் டெல்லி வந்த போதும், ஒரு சம்பவம் ஊடகங்களில் செய்தியானது.

அப்போது டெல்லி வந்த வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை வரவேற்பதற்காக பிரதமர் மோடி தனது வாகனத்தில் விமான நிலையத்திற்கு சென்றார். அந்த நேரத்தில் வழியில் செல்லும் மற்ற வாகனங்கள் எதுவும் நிறுத்தப்படவில்லை. அவை வழக்கம் போலவே இயங்கின. இது அப்போது ஊடகங்களில் செய்தியானது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com