அச்சுறுத்தும் ஓமைக்ரான் BF7 திரிபு-அறிகுறிகள் என்னென்ன? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?

அச்சுறுத்தும் ஓமைக்ரான் BF7 திரிபு-அறிகுறிகள் என்னென்ன? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?
அச்சுறுத்தும் ஓமைக்ரான் BF7 திரிபு-அறிகுறிகள் என்னென்ன? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?

ஓமைக்ரான் BF.7 - BA.5 ஆகிய கொரோனா திரிபுகளின் பரவல் மக்களை மீண்டும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கியுள்ளது. ஏற்கெனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களையும், கொரோனாவுக்கு தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்களையும் கூட பாதிக்கலாம் என ஆய்வுகள் கூறுகின்றன. 

ஓமைக்ரானின் சப்வேரியண்ட்டான BF.7, சீனாவில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்தது. இது உலகையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுவரை, இந்தியாவில் இந்த வைரஸூக்கு மூன்று முதல் நான்கு பேர் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதனால், தொற்று மேலும் பரவாமல் இருக்க அரசால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அறிக்கைகளின்படி, புதிய Omicron திரிபு விரைவாக பரவுகிறது மற்றும் குறுகிய இன்குபேஷன் காலத்தையே கொண்டுள்ளது. இருப்பினும், இது உண்மையில் இதுவரை அதிக எச்சரிக்கையை ஏற்படுத்தவில்லை. முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் புற்றுநோய், கட்டுப்பாடற்ற சர்க்கரை நோய், இதயம் அல்லது சிறுநீரகப் பிரச்னைகள் போன்ற பல நோய்களைக் கொண்டவர்கள் உட்பட, தடுப்பூசி போடப்படாதவர்கள் அல்லது பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் அதிகம்.

ஓமிக்ரான் துணை வகை BF.7 இன் அறிகுறிகள் என்னென்ன?

ஓமிக்ரானின் துணை மாறுபாடு BF.7 இன் அறிகுறிகள் மற்ற துணை மாறுபாடுகளின் அறிகுறிகளைப் போலவே இருக்கும். மூக்கு ஒழுகுதல், தொண்டைப்புண், காய்ச்சல், இருமல், வாந்தி, சோர்வு மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை சில பொதுவான அறிகுறிகளாகும். இருப்பினும், பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு மற்றும் ஏற்கனவே இருக்கும் மருத்துவ பிரச்னைகள் உள்ளவர்கள் மாறுபாட்டிலிருந்து தீவிர நோய்களை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனக் கூறப்படுகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நெருங்கி வருவதால், கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது கொண்டாட்டங்களை விட முக்கியமானது. முககவசத்தை கட்டாயம் அணியவும், சமூக விலகல் விதிமுறைகளை கடைபிடிக்கவும், உங்கள் கைகளை அடிக்கடி கழுவவும் மறக்காதீர்கள்.

இந்த உள்ளடக்கம் வழிகாட்டுதல் உள்ளிட்ட பொதுவான தகவல்களை மட்டுமே வழங்குகிறது. இது எந்த வகையிலும் ஒரு தொழில்முறை மருத்துவ கருத்தை மாற்றாது.

-அருணா ஆறுச்சாமி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com