
"INDIA" கூட்டணி தற்போது பலவீனமாக உள்ளதாக ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள இந்தியா கூட்டணி குறித்து ஜம்மு காஷ்மீரில் உள்ள குப்வாராவில் செய்தியாளர்களிடம் பேசிய உமர் அப்துல்லா,
"INDIA கூட்டணிக்குள் ஒரு சில பிரச்னைகள் நிலவுகின்றன. 5 மாநிலத் தேர்தல்கள் நடைபெற உள்ளதால் இக்கூட்டணி பலவீனமாக இருக்கிறது. சீட்டுகள் ஒதுக்குவதில் ஒரு சில கட்சிகள் இடையே பிரச்னை நீடிக்கிறது.
குறிப்பாக சமாஜ்வாதி, காங்கிரஸ் கட்சிகள் உத்தரப்பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. எனவே 5 மாநிலத் தேர்தலுக்கு பிறகு மீண்டும் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தி, ஒருங்கிணைந்து செயல்படுவோம்” என்று தெரிவித்துள்ளார்.