\
om prakash
om prakashinstagram

21 லட்சம் ஃபாலோயர்ஸ் இருந்தும் தேர்தலில் படுதோல்வி.. வெறும் 33 வாக்குகள் மட்டுமே பெற்ற ஜோதிடர்!

21 லட்சம் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்ஸ் இருந்தும் உள்ளாட்சி தேர்தலில் வெறும் 33 வாக்குகள் மட்டுமே பெற்று பிரபல ஜோதிடர் படுதோல்வியை சந்தித்துள்ளார்.
Published on: 
Summary

சமூக வலைதளங்களில் பிரபலமான ஜோதிடர் ஓம்பிரகாஷ் பிஷ்னோய், ஜோத்பூர் மாவட்ட ஊராட்சி மன்றத் தேர்தலில் வெறும் 33 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். 21 லட்சம் ஃபாலோயர்ஸ் இருந்தாலும், மக்கள் ஆதரவு பெற முடியவில்லை.

இன்ஸ்டாகிராம் மற்றும் யூட்யூப்பில் 21 லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோயர்ஸ்களைக் கொண்ட பிரபல ஜோதிடரான ஓம்பிரகாஷ் பிஷ்னோய், ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தலில் வெறும் 33 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்துள்ளார்.

ஜோத்பூர் மாவட்டம் ஓசியான் பகுதியில் உள்ள அவரது சொந்தக் கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு (sarpanch election) ஓம்பிரகாஷ் பிஷ்னோய் போட்டியிட்டார். மொத்தமுள்ள ஆயிரத்து 600 வாக்குகளில் அவருக்கு 33 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன.

சமூக வலைதள லைக்குகள், வாக்குகளாக மாறாது என இணையவாசிகள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com