#TOPNEWS கொரோனாவுக்கு தமிழகத்தில் முதல் பலி; நாடு முழுவதும் ஊரடங்கு; இன்னும் சில செய்திகள்

#TOPNEWS கொரோனாவுக்கு தமிழகத்தில் முதல் பலி; நாடு முழுவதும் ஊரடங்கு; இன்னும் சில செய்திகள்

#TOPNEWS கொரோனாவுக்கு தமிழகத்தில் முதல் பலி; நாடு முழுவதும் ஊரடங்கு; இன்னும் சில செய்திகள்
Published on

கொரோனா காட்டுத்தீபோல் பரவுவதால் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கை அமல்படுத்தினார் பிரதமர் நரேந்திர மோடி.

உலகை அச்சுறுத்தும் கொரோனாவால் ஓராண்டுக்கு ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைப்பு. ஜப்பான் பிரதமரின் பரிந்துரையை ஏற்று ஒலிம்பிக் கமிட்டி அறிவிப்பு.

ஊரடங்கு உத்தரவுகளை பின்பற்றாவிட்டால் சிறை தண்டனை உள்ளிட்ட நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை.

கொரோனா தடுப்புக்கான உள்கட்டமைப்புகளை மேம்படுத்த 15 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு. பிரதமர் மோடி அறிவிப்பு

கொரோனா பாதிப்புடன் மதுரையில் சிகிச்சை பெறு வந்த 54 வயது நபர் உயிரிழப்பு- அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு.

கொரோனா பாதிப்பை சமாளிக்க தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் உதவித்தொகை. முதலமைச்சர் பழனிசாமி பேரவையில் அறிவிப்பு

தனிமைப்படுத்தலை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூன் 30 வரை அவகாசம் அளிக்கப்படுவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி.

ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வந்தால் ஓராண்டு சிறை.- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி எச்சரிக்கை.

உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 18 ஆயிரத்து 600 ஐ தாண்டியது. இத்தாலியில் ஒரே நாளில் 740 பேர் உயிரிழந்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com