இந்தியா
பெண்களை போட்டோ எடுப்பதா? தட்டிக் கேட்டவர் கொலை!
பெண்களை போட்டோ எடுப்பதா? தட்டிக் கேட்டவர் கொலை!
ஜெய்ப்பூர் அருகே பெண்களை படம் பிடிப்பதை தடுத்த முதியவரை, அரசு ஊழியர்கள் அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்பூரில் உள்ள பிரதாப்கர் என்ற பகுதியில் இருந்த பெண்கள் சிலரை, அவ்வழியாக வந்த நகராட்சி ஊழியர்கள் தங்களது செல்போன்களில் படம் எடுக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது, 55 வயது முதியவரான ஜாபர்கான் அதனை தடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அரசு ஊழியர்கள் அந்த முதியவரை கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.