’2 கி.மீக்கு 100 ரூபாயா?!’.. அதிகரித்த புகாரால் கர்நாடகாவில் ஓலா, ரேபிடோ, ஊபருக்கு தடை!

’2 கி.மீக்கு 100 ரூபாயா?!’.. அதிகரித்த புகாரால் கர்நாடகாவில் ஓலா, ரேபிடோ, ஊபருக்கு தடை!
’2 கி.மீக்கு 100 ரூபாயா?!’.. அதிகரித்த புகாரால் கர்நாடகாவில் ஓலா, ரேபிடோ, ஊபருக்கு தடை!

கர்நாடகாவில் ஓலா, ஊபர், ரேபிடோ போன்ற ஆன்லைன் ஆட்டோ வாகன சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஓலா, ஊபர், ரேபிடோ நிறுவனங்கள் தங்களது ஆன்லைன் ஆட்டோ, கார் வாகன சேவைகளுக்கு தொடர்ந்து அதிகம் கட்டணம் வசூலிப்பதாக கர்நாடகாவில் மக்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். சிலர் டிவிட்டரில் சம்பந்தப்பட்ட நிறுவங்களை நேரடியாக இணைந்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் , சரியான பதிலும் கிடைப்பெறவில்லை.

இருப்பினும் குறைந்த தூரங்களுக்கும், இந்த ஆட்டோ சேவை நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பல்வேறு தரப்பிலிருந்து தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்தது. பயணத்தின் முதல் 2 கி.மீக்கு 30 ரூபாயும், அதன் பிறகு கி.மீக்கு 13 ரூபாயும் வசூலிக்க வேண்டும் என கர்நாடக அரசு விலை நிர்ணயித்துள்ளது. ஆனால், தற்போது, இந்த ஆன்லைன் ஆட்டோ நிறுவனங்கள் 2 கி.மீக்கு குறைவான தூரத்திற்கு 100 ரூபாயை வசூலிப்பதாக கூறப்படுகிறது.


இதனையடுத்து கர்நாடக அரசின் போக்குவரத்துறை ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ‘’ மொபைல் ஆஃப்கள் மூலம் இயங்கும் ஆட்டோ சேவைகள் நிறுத்தப்பட வேண்டும். அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டனத்தை வசூலிக்கக் கூடாது. அடுத்த மூன்று நாள்களுக்குள், அரசு நிர்ணயித்த தொகைக்கு ஏற்ப, ஆன்லைன் ஆட்டோ சேவை நிறுவனங்கள் தங்களின் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்.’’ என அறிக்கை வெளியிட்டுள்ளது.

கர்நாடகா அரசின் இந்த அறிவிப்புக்கு அம்மாநில மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், இந்த அறிவிப்பு ஓலா, ஊபர் மற்றும் ரேபிடோ ஆகியவை சொந்தமாக ஆட்டோக்களுக்கு தான் பொருந்தும் டாக்சிகள் மட்டும் இயங்கலாம் என தெரிவிக்கபட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com