\
Oil Companies Raise Petrol and Diesel Prices Again in India
பெட்ரோல், டீசல் விலைPt web

பெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

மே 15 ஆம் தேதி பெட்ரோல் டீசல் விலை 3 ரூபாய் அளவில் உயர்த்தப்பட்ட நிலையில், இன்று மீண்டும் பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியிருக்கின்றன.
Published on

அமெரிக்கா ஈரான் இடையே கடந்த பிப்ரவரி இறுதியில் தொடங்கிய போர் சுமார் 1 மாதம் நீடித்தது. இந்த போரின் தொடர்ச்சியாக ஈரான் உலகின் முக்கிய கச்சா எண்ணெய் போக்குவரத்து தடமான ஹோர்முஸ் நீரிணையை முடக்கியது. இந்த நிலைமையைச் சமாளிக்க வெனிசுலா மற்றும் ரஷ்யா ஆகிய இடங்களில் இருந்து கூடுதல் விலைக்கு இந்தியா அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்தன. அதே நேரம் 5 மாநில சட்டசபை தேர்தல் காரணமாக சந்தையில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தவும் மத்திய அரசு விரும்பவில்லை.

மோடி
மோடிPt web

அதேசமயம், எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் எனவும் கொரானா காலக்கட்டம் போல வீட்டிலிருந்தே வேலை செய்யும் வகையில் கார்ப்பரேட் நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடி நாட்டு மக்களை அறிவுறுத்தி வந்தார். தொடர்ந்து, கடந்த மே 15 ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.14 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 3.11 ரூபாயும் மத்தியரசு உயர்த்தியிருந்தது. இந்தசூழலில் தான், பெட்ரோல் டீசல் விலை உயர்ந்த 5 நாட்களில் இன்று மீண்டும் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியிருக்கின்றன. அதன்படி, பெட்ரோல் 87 காசுகளும், டீசல் விலை 91 காசுகளும் உயர்த்தப்பட்டிருக்கிறது.

Oil Companies Raise Petrol and Diesel Prices Again in India
சாலையோர தொழுகைக்கு கட்டுப்பாடு.. குவிந்த மக்கள்.. வெடித்த வன்முறை.. பதற்றத்தில் கொல்கத்தா!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com