\
25,000 புதிய பெட்ரோல் பங்குகளை திறக்க முடிவு

25,000 புதிய பெட்ரோல் பங்குகளை திறக்க முடிவு

25,000 புதிய பெட்ரோல் பங்குகளை திறக்க முடிவு
Published on

நாடு முழுவதும் புதிதாக 25 ஆயிரம் பெட்ரோல் பங்க்குகளை அமைக்க அனுமதி அளிக்க பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை நிறுவனங்களே நிர்ணயம் செய்யும் நடைமுறை அமலில் உள்ளது. இதன் காரணமாக சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்து, பெட்ரோல், டீசல் விலையில் அவ்வப்போது மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெட்ரோல் பங்க் டீலர்களை நியமனம் செய்வதற்கான வரைமுறை கொள்கையையும் மத்திய எண்ணெய் அமைச்சகம் தற்போது திரும்ப பெற்றுக் கொண்டுள்ளது. 

இதனால் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் பங்க்குகளை அமைப்பதற்கான பணிகளில் இனி சுதந்திரமாக ஈடுபட முடியும். மேலும் பெட்ரோல் பங்க்குகளை அமைப்பதற்கான விதிகளையும் சொந்தமாக வகுக்க முடியும். எனவே இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற பொதுத் துறை நிறுவனங்கள் அடுத்த சில மாதங்களுக்குள் நாடு முழுவதும் 25 ஆயிரம் பெட்ரோல் பங்க்குகளை திறக்க முடிவு செய்துள்ளன. இதற்காக ஆர்வமுள்ள பெட்ரோல் பங்க் முகவர்கள் விண்ணப்பிக்கலாம் என பொதுத்துறை நிறுவனங்கள் விளம்பரம் செய்துள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com