\
ஹெலிகாப்டர் விபத்து: வருண் சிங்கிற்கு பெங்களூருவில் சிகிச்சை தர திட்டம்?

ஹெலிகாப்டர் விபத்து: வருண் சிங்கிற்கு பெங்களூருவில் சிகிச்சை தர திட்டம்?

ஹெலிகாப்டர் விபத்து: வருண் சிங்கிற்கு பெங்களூருவில் சிகிச்சை தர திட்டம்?
Published on

நீலகிரி ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்த கேப்டன் வருண் சிங்கிற்கு பெங்களூருவில் சிகிச்சையளிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

நேற்று நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். கேப்டர் வருண் சிங் 80% தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் அவருக்கு வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவரை பெங்களூருவில் உள்ள விமானப்படை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல அதிகாரிகள் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெனரல் பிபின் ராவத் உட்பட 13 பேரின் உடல்களுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், கேப்டன் வருண் சிங்கின் உடல் பாகங்கள் இயங்குவதாகவும், அவருக்கு உயர் சிகிச்சை அளிக்க வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்படலாம் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரை பெங்களூரு கொண்டுசெல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com