கன்னடர்களை அவமானப்படுத்தியதாக தனியார் நிறுவன அதிகாரியை போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லியை சேர்ந்தவர் சாத்விக் சச்சார். பெங்களூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் ஹெச்.ஆர் அதிகாரியாக பணியாற்றுகிறார். சஞ்சய் நகரில் வசிக்கும் இவர், நேற்று முன் தினம் ஆன்லைனில் சாப்பாடு ஆர்டர் செய்தார். குறிப்பிட்ட நேரத்தை விட 20 நிமிடம் தாமதமாக வந்த டெலிவரி பணியாளர் அனிலை ஆங்கிலத்தில் திட்டினார் சச்சார். அவர், எனக்கு ஆங்கிலம் தெரியாது என்று கன்னடத்தில் சொன்னார். இதையடுத்து ’கன்னடர்கள் எல்லாருமே சோம்பேறிகள்’ என்றும் ’மோசமான கன்னட மொழியை இங்கு பேசாதே’ என்றும் அந்த அதிகாரி சொன்னாராம்.
இதையடுத்து கன்னடர்களையும் கன்னட மொழியையும் இழிவுபடுத்தியதாக சஞ்சய் நகர் போலீசில் அனில் புகார் செய்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்த தனியார் நிறுவன அதிகாரியை கைது செய்துள்ளனர்.