உயிர் சேதம் அதிகம் என்றாலும் பலர் உயிர் தப்பிக்க காரணம் இதுதான்!

ரயில் பெட்டிகள் விபத்துக்குள்ளாகும்போது, உயிர்ச்சேதங்களைத் தடுப்பதற்கு LHP தகவல் தொழில்நுட்பமும் முக்கியமானதாக இருக்கிறது. அதுகுறித்து இந்த வீடியோவில் அறிவோம்.

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே நேற்று (ஜூன் 2) இரவு 7 மணி அளவில் 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வரவில்லை. அதேநேரம் ரயில் விபத்திற்கான காரணம் குறித்து அறியப்பட்டு வருகிறது. இந்த ரயில் விபத்தில் தற்போது வரை 288 பேர் பலியாகி இருப்பதாகவும், 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில், ரயில் பெட்டிகள் விபத்துக்குள்ளாகும்போது, உயிர்ச்சேதங்களைத் தடுப்பதற்கு பல்வேறு தகவல் தொழில்நுட்பங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் மிகவும் முக்கியத்துவமானது LHP தகவல் தொழில்நுட்பம். இந்த LHP தகவல் தொழில்நுட்பம் குறித்து இந்த வீடியோவில் காண்போம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com