ஒடிசா ரயில் விபத்து: கைதான மூவர் உட்பட 7 பேர் பணியிடை நீக்கம்.. ரயில்வே நிர்வாகம் அதிரடி!

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக, சிபிஐ அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட 3 பேர் உள்பட ரயில்வே நிர்வாகம் 7 அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்துள்ளது.
ஒடிசா ரயில் விபத்து
ஒடிசா ரயில் விபத்துPTI

கடந்த ஜூன் 2ஆம் தேதி இரவு 7 மணி அளவில் ஒடிசாவின் பாலசோர் மாவட்டம் பாஹாநாகா அருகே நடந்த ரயில் விபத்து சர்வதேச அளவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் 293 பேர் பலியானதாகவும், 1,000க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

‘சிக்னல்கள் கோளாறு காரணமாக ரயில் விபத்து ஏற்பட்டது’ என இந்திய ரயில்வே வாரியம் விளக்கம் அளித்திருந்தது. மேலும், ரயில் விபத்து தொடர்பாக விசாரிக்க உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது எனவும், ரயில் விபத்து குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்படும் எனவும் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார்.

ஒடிசா ரயில் விபத்து
ஒடிசா ரயில் விபத்துtwitter

தொடர்ந்து இந்த விபத்து குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக ரயில்வே ஊழியர்கள் 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தென்கிழக்கு ரயில்வே பொது மேலாளர் அனில் குமார் மிஸ்ரா,

இதுவரை 3 ஊழியர்களை சிபிஐ கைது செய்துள்ளது. தற்போது ஸ்டேஷன் மாஸ்டர், போக்குவரது ஆய்வாளர், பராமரிப்பாளர் உள்ளிட்ட 7 பேர் பணி நேரத்தில் கடமையை செய்ய தவறியதற்காகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தவறான சிக்னல் வழங்கப்பட்டதே இதற்கு முக்கியக் காரணம். ரயில்வே ஊழியர்கள் எச்சரிக்கையாக இருந்திருந்தால் பெரும் விபத்தை தவிர்த்திருக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

தென்கிழக்கு ரயில்வேயின் புதிய பொது மேலாலர், கோட்ட ரயில்வே மேலாளர் ஆகியோர் பாஹாநாகா ரயில் நிலையத்துக்குச் சென்று பார்வையிட்டதன் தொடர்ச்சியாக, இந்த பணியிடை நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பாலசோா் மாவட்ட ரயில்வே சிக்னல் பிரிவு மூத்த பொறியாளா் அருண்குமாா் மகந்தா, பிரிவு பொறியாளா் முகமது ஆமீா்கான், தொழில்நுட்ப ஊழியா் பப்புகுமாா் ஆகியோா் சிபிஐ போலீசால் கைது செய்யப்பட்டனர். இவர்களின் 5 நாள் நீதிமன்ற காவல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு மேலும் நான்கு நாள்கள் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com