ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே நேற்று (ஜூன் 2) இரவு 7 மணி அளவில் 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வரவில்லை. அதேநேரம் ரயில் விபத்திற்கான காரணம் குறித்து அறியப்பட்டு வருகிறது.
இந்த ரயில் விபத்தில் தற்போது வரை 288 பேர் பலியாகி இருப்பதாகவும், 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில், ரயில் விபத்து நடைபெற்ற ஒடிசா பாலசோர் பகுதிக்கு பிரதமர் மோடி இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அதுபோல், ரயில் விபத்தில் காயமடைந்து கட்டாக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் மோடி நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.
இந்த நிலையில், ரயில் விபத்து ஏற்பட்டால் அதில் ஏற்படும் சிக்கல் குறித்து மீட்புப் படை வீரர் ஒருவர் புதிய தலைமுறைக்கு சிறப்புப் பேட்டி அளித்துள்ளார். அவர், “இந்த விபத்தில் மீட்புப் பணியின்போது நிறைய கஷ்டப்பட்டோம். 150 சடலங்களை எடுத்தோம்” என்றார். மேலும், அவர் பேசியது குறித்து இந்த வீடியோவில் பார்ப்போம்.