“பாய் ஃப்ரெண்ட்டை திருமணம் செய்யப்போகிறேன்” - திருநங்கை கமிஷனர் ஐஸ்வர்யா

“பாய் ஃப்ரெண்ட்டை திருமணம் செய்யப்போகிறேன்” - திருநங்கை கமிஷனர் ஐஸ்வர்யா

“பாய் ஃப்ரெண்ட்டை திருமணம் செய்யப்போகிறேன்” - திருநங்கை கமிஷனர் ஐஸ்வர்யா
Published on

திருநங்கை இணை கமிஷனர் ஐஸ்வர்யா தன் ஆண் தோழனை திருமணம் செய்துக் கொள்ள போவதாக அறிவித்துள்ளார். 

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ஐஸ்வர்யா ரிதுபர்னே பதான். இவருக்கு 34 வயது. ஒடிசா அரசின்  ஜி.எஸ்.டி பிரிவில் இணை கமிஷனராக இருக்கிறார் இவர். கைநிறைய சம்பளம். ஆனால் இவர் சுதந்திரமாக இல்லை. பிறப்பால் ஆணாக பிறந்த இவர், அரசு வேலையில் அமர்ந்த பிறகு தன்னை ஒரு  பெண்ணாகவே உணர்ந்துள்ளார். இதை மனதிற்குள்ளாகவே வைத்து புழுங்கிக் கொண்டிருந்த ஐஸ்வர்யா, 2014 ஆண்டு உச்சநீதி மன்றம் திருநங்கைகளை மூன்றாம் பாலினத்தவராக அறித்தபோது தன்னை இவர் வெளிப்படையாக மூன்றாம் பாலினத்தவராக அறித்துக் கொண்டார். 

இந்நிலையில்தான் கடந்த 6 ஆம் தேதி உச்சநீதி மன்றம் வரலாற்றுப்பூர்வமான ஒரு தீர்ப்பை வெளியிட்டது. தன்பால் ஈர்ப்பை குற்றமாக அறிவிக்கும் 377வது சட்டபிரிவை செல்லாது என்று அறிவித்தது. அதனை அடுத்து அந்தத் தீர்ப்பால் மகிழ்ச்சியைந்தவர்களில் ஐஸ்வர்யாவும் ஒருவர். இந்தத் தீர்ப்புக்கு பிறகு தனது வாழ்வியல் துணையை இவர் திருமணம் செய்ய போவதாக அறித்துள்ளார். ஆகவே ஒட்டுமொத்த ஒடிசாவின் கவனமும் ஐஸ்வர்யா பக்கம் திரும்பியுள்ளது. 

“ஆண், பெண் திருமணம் மட்டுமே இப்போதைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் நீதிமன்றம் நமது குடிமக்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்களுடன் காதலை பகிர்ந்து கொள்ள உரிமை வழங்கியுள்ளது. நாங்கள் எல்ஜிபிடி சமூகத்திற்குள் நடைபெறும் திருமணங்களை சட்டப்பூர்வமாக அனுமதிக்கும் புதிய சட்டம் விரைவில் வரும் என மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம். எனக்கு ஒரு ஆண் தோழன் இருக்கிறார்.  விரைவில் நாங்கள் திருமணம் செய்துக்கொள்ள இருக்கிறோம். என்னுடைய அனைத்து அரசு ஆவணங்களிலும் நான் மூன்றாம் பாலினம் என்றே பதிவு செய்திருக்கிறேன்.” எனக் கூறியிருக்கிறார் ஐஸ்வர்யா. 

ஐஸ்வர்யா, தன் பால் அடையாளத்தை மாற்ற முடிவு செய்த போது அவரது வீட்டார் கடுமையாக எதிர்த்துள்ளனர். எதிர்ப்பை மீறி அவர் தன் அடையாளத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அதன் பிறகு இன்று அவர் திருமணம் செய்துக்கொள்ளும் துணிச்சலான முடிவையும் மேற்கொண்டுள்ளார். இன்னும் ஒருபடி மேலே சென்று அவர் ஒரு குழந்தையை பெற்றெடுக்கவும் விருப்பம் தெரிவித்துள்ளார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com