\
இன்ஸ்பெக்டர்களுக்கு முட்டி போடும் தண்டனை

இன்ஸ்பெக்டர்களுக்கு முட்டி போடும் தண்டனை

இன்ஸ்பெக்டர்களுக்கு முட்டி போடும் தண்டனை
Published on

ஒடிசாவில் சீருடை அணியாத ஊர்காவல் படை வீரர்களுக்கு முட்டி போடும் தண்டனை அளித்துள்ளார் ஒரு இன்ஸ்பெக்டர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

ஒடிசா மாநிலம், பாரிபடா பகுதியில் ஊர்காவல் படை இன்ஸ்பெக்டர் ஒருவர், கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்பு, சீருடை அணியாத ஒரு பெண் உட்பட நான்கு ஊர்காவல் படை வீரர்களுக்கு முட்டி போடும் தண்டனை அளித்துள்ளார். அந்த 4 வீரர்களும் சீருடையுடன், போலீஸ் வாகனத்தின் பின்னால் முட்டிபோட்டு நிற்கும் இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.  

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com