\
உணவு வழங்கி உபசரிக்கும் ரோபோக்கள் !

உணவு வழங்கி உபசரிக்கும் ரோபோக்கள் !

உணவு வழங்கி உபசரிக்கும் ரோபோக்கள் !
Published on: 

ஒடிசா மாநிலத்தில் முதல்முறையாக உணவகம் ஒன்றில் வாடிக்கையாளர்களுக்கு உணவு வழங்க 2 ரோபோக்கள் பணியமர்த்தப்பட்டுள்ளன. 

புவனேஷ்வரில் உள்ள உணவகத்தில் அறிமுகப்படுத்தபட்டுள்ள இந்த இரண்டு ரோபோக்களும் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டவை. சம்பா மற்றும் சம்மேலி என பெயரிடப்பட்டுள்ள இந்த இரண்டு ரோபோக்களும் ராடார் சிக்னல்கள் மூலம் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் ஒடியா உள்ளிட்ட பல்வேறு மொழிகளையும் பேசும் வகையிலான கட்டளைகளுடன் இவை தயாரிக்கப்பட்டுள்ளன.

உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை அளிக்கும் நோக்கில் இந்த ரோபோக்கள், அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கடையின் உரிமையாளர் கூறியுள்ளார்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com