\
கேரள அரசியலில் வினோதம்: வெற்றி பெற்று சட்டப்பேரவை செல்லும் மாமனாரும், மருமகனும்

கேரள அரசியலில் வினோதம்: வெற்றி பெற்று சட்டப்பேரவை செல்லும் மாமனாரும், மருமகனும்

கேரள அரசியலில் வினோதம்: வெற்றி பெற்று சட்டப்பேரவை செல்லும் மாமனாரும், மருமகனும்
Published on

கேரள அரசியல் வரலாற்றில் முதல் முறையாக மானமாரும் மருமகனும் சட்டமன்ற உறுப்பினர்களாகி சட்டப்பேரவைக்கு செல்கின்றனர்.

கேரளாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் பினராயி விஜயனே ஆட்சியை தக்கவைக்கிறார். இதன் மூலம் தொடர்ந்து இரண்டாம் முறையாக ஆட்சியை பிடித்திருக்கும் பெருமையை அவர் பெற்றுள்ளார். 40 ஆண்டுகால கேரள அரசியலில் ஒரு கட்சி தொடர்ந்து இரண்டாம் முறையாக ஆட்சிக்கு வருவது இதுவே முதன்முறை.

இந்நிலையில், இந்த தேர்தலில் பினராயி விஜயனின் மருமகன் முகமது ரியாஸும் வெற்றி பெற்றிருப்பதால் அம்மாநில அரசியல் வரலாற்றில் முதன் முறையாக மாமனாரும் மருமகனும் சட்டமன்ற உறுப்பினர்களாகி சட்டப்பேரவைக்குச் செல்கின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com