HEADLINES |தமிழக அரசு உத்தரவு முதல் கனமழை எச்சரிக்கை வரை!
இன்றைய தலைப்புச் செய்தியானது, தமிழக அரசு உத்தரவு முதல் கனமழை எச்சரிக்கை வரை விவரிக்கிறது.
தமிழ்நாட்டிலேயே மிக நீளமான உயர்மட்ட பாலம் என்ற பெருமையை பெறும் கோவை அவிநாசி சாலை மேம்பாலம்.... மக்கள் பயன்பாட்டுக்கு இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்...
ஊர்கள், தெருக்கள், சாலைகளின் பெயருக்கு பின்னால் உள்ள சாதிப் பெயர்களை நீக்க தமிழக அரசு உத்தரவு... முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில் அரசாணை..
அதிமுக-தவெக கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டுவிட்டது... குமாரபாளையம் அதிமுக பரப்புரை கூட்டத்தில் தவெக கொடிகளும் பறந்ததை சுட்டிக்காட்டி பழனிசாமி பேச்சு...
துப்பாக்கி முனையில் ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேர், நான்கு விசைப்படகளுடன் கைது... எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை நடவடிக்கை...
மும்பையில் பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசுகிறார் பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்... இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை....
அரசு கேபிள் டிவியில் 'புதிய தலைமுறை' முடக்கப்பட்டதை கண்டித்து சென்னையில் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்... கருத்து சுதந்திரத்தை காக்க வலியுறுத்தி முழக்கம்...
தமிழகத்தில் இன்று காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வடமாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை... சென்னையில் மழை பெய்யக்கூடும் என கணிப்பு
ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு குற்றச்சாட்டு குறித்து சிறப்பு குழு அமைத்து விசாரணை நடத்த கோரிய மனு... வரும் 13ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது உச்ச நீதிமன்றம்...
பிஹார் தேர்தலில் 3 சிறிய கட்சிகளால், தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி... காங்கிரஸ், ராஷ்ட்டிரிய ஜனதா தளத்தின் மகாபந்தன் கூட்டணியிலும் சிக்கல்..
காஸாவில் அமைதியை ஏற்படுத்துவதற்கான முதற்கட்ட திட்டத்திற்கு இஸ்ரேல், ஹமாஸ் ஒப்புதல்... அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு...