HEADLINES |கனமழை எச்சரிக்கை முதல் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா வரை!
தமிழ்நாடு யாருடன் போராடும் என்ற ஆளுநர் ஆர்.என்.ரவியின் கேள்விக்கு, முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
கச்சத்தீவை தாரைவார்த்து கொடுக்க உறுதுணையாக இருந்ததே திமுக அரசுதான் என்று மத்திய இணை அமைச்சர் முருகன் தெரிவித்தார்.
கரூர் சம்பவத்திற்கு தமிழகம் அரசும் விஜயும் பொறுப்பேற்க வேண்டும்... வீட்டைவிட்டு விஜய் வெளியே வரவேண்டும் என்றும் பிரேமலதா வலியுறுத்தியுள்ளார்.
வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக பாமக நிறுவனர் ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் எம்எல்ஏ அருள் தெரிவிதுள்ளார்.
தமிழகத்தில் வரும் 9ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் இருமல் மருந்து குடித்த குழந்தைகள் இறந்த விவகாரத்தில் மருத்துவர் கைது.. சர்ச்சைக்குள்ளான இருமல் மருந்து விற்பனைக்கு மாநில அரசு தடை...
ஆன்மிக பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் ரஜினிகாந்த், சாலையோரம் உணவருந்திய புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதியை இந்தியா மீண்டும் கைப்பற்ற வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
மகளிர் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.
காஸா மீதான தாக்குதலை நிறுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டும், இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.