HEADLINES | பணக்காரர் பட்டியலில் இடம்பெற்ற ஷாருக் கான் முதல் காஸாவுக்கு இறுதி எச்சரிக்கை வரை!
புதிய தலைமுறை இணையதளம் நாள்தோறும் அன்றைய தலைப்புச் செய்திகள் குறித்து இருவரிகளில் பதிவு செய்து வருகிறது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான செய்திகளில், பணக்காரர் பட்டியலில் இடம்பெற்ற ஷாருக் கான் முதல் காஸாவுக்கு இறுதி எச்சரிக்கை வரை விவரிக்கிறது.
பண்டிகை காலத்தையொட்டி மாநிலங்களுக்கான வரிப் பகிர்வை முன்கூட்டியே விடுவித்தது மத்திய அரசு... தமிழ்நாட்டிற்கு 4,144 கோடி ரூபாய் விடுவிப்பு..
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி வலுப்பெற்று, நாளை கரையை கடக்கும் என கணிப்பு... தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்...
மத்தியப் பிரதேசத்தில் சிறுநீரகம் தொடர்பான கோளாறுகளால் 6 குழந்தைகள் உயிரிழந்த நிலையில் மத்தியக் குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது.
டெல்லி பல்கலைக்கழக நிகழ்வுகளில் விருந்தினர்களுக்கு மலர் கொத்துகள் வழங்குவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வளங்கள் வீணாவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 9 லட்சத்து 55 ஆயிரம் கோடி ரூபாயுடன் தொழிலதிபர் முகேஷ் அம்பானி முதலிடம்... முதன்முறையாக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்றார் பாலிவுட் நடிகர் ஷாருக் கான்..
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடிப்படை உரிமைகளுக்கான போராட்டம் தீவிரம்... மோதல்களில் 12 பேர் உயிரிழப்பு..
ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசால் விதிக்கப்பட்டிருந்த தொலைத்தொடர்பு, இணையச் சேவை முடக்கம் நீக்கம்... மக்கள் உறவினர்களுடன் உரையாடி மகிழ்ச்சி..
காஸாவில் இருந்து பாலஸ்தீனர்கள் உடனடியாக வெளியேற இஸ்ரேல் உத்தரவு... வெளியேற மறுப்பவர்கள் பயங்கரவாதிகளாக கருதப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டிசம்பர் 5, 6 தேதிகளில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் ரஷ்ய அதிபர் புடின்... இரு நாடுகளுக்கும் அமெரிக்கா கடும் நெருக்கடிகள் அளித்து வரும் நிலையில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் இன்று தொடக்கம்...