குஜராத் இடைத்தேர்தல் : காங்கிரஸில் இருந்து பாஜகவிற்கு தாவியவர் தோல்வி

குஜராத் இடைத்தேர்தல் : காங்கிரஸில் இருந்து பாஜகவிற்கு தாவியவர் தோல்வி

குஜராத் இடைத்தேர்தல் : காங்கிரஸில் இருந்து பாஜகவிற்கு தாவியவர் தோல்வி
Published on

குஜராத்தில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் அல்பேஷ் தாகூர் தோல்வியடைந்தார்.

மகாராஷ்டிரா, ஹரியானா சட்டமன்ற பொதுத்தேர்தலுடன், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள தொகுதிகளுக்கு
இடைத்தேர்தல் கடந்த திங்கட்கிழமை நடந்தது. அதன்படி, குஜராத்தின் ரதான்பூர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக
சார்பில் போட்டியிட்ட அல்பேஷ் தாகூர் தோல்வியடைந்தார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரகு தேசாய் வெற்றி
வாகை சூடினார்.

அல்பேஷ், கடந்த ஏப்ரல் மாதத்தில்தான் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். தனக்கு கட்சியில் முறையான
இடம் கொடுக்கப்படவில்லை என்றும், நாடாளுமன்ற தேர்தலில் தனக்கு வாய்ப்பளிக்கவில்லை என்றும் கட்சியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com