‘ராகுல் காந்தி குறித்த ஒபாமாவின் கருத்துக்கள் வெறுக்கத்தக்கவை'- சிவசேனா கண்டனம்

‘ராகுல் காந்தி குறித்த ஒபாமாவின் கருத்துக்கள் வெறுக்கத்தக்கவை'- சிவசேனா கண்டனம்

‘ராகுல் காந்தி குறித்த ஒபாமாவின் கருத்துக்கள் வெறுக்கத்தக்கவை'- சிவசேனா கண்டனம்
Published on

அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா, ‘A Promised Land'  என்ற பெயரில் தமது நினைவுகளைப் புத்தகமாக எழுதியிருக்கிறார். அந்தப் புத்தகத்தில் உலகத் தலைவர்கள், அமெரிக்க அதிபர் பதவியில் இருந்தபோது நடந்த சம்பவங்கள், திருமண வாழ்க்கை என பல்வேறு விவகாரங்கள் குறித்து ஒபாமா பகிர்ந்திருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பற்றி குறிப்பிடுகையில், `பதற்றத்தோடு இருப்பவர்; நன்றாகப் படித்து ஆசிரியரைக் கவர வேண்டும் என நினைக்கும் மாணவர் போல் இருந்தாலும், குறிப்பிட்ட ஒரு விவகாரத்தில் ஆழ்ந்த அறிவைப் பெறக்கூடிய விருப்பமோ, தகுதியோ பெறாமல் இருக்கிறார்’ என்று ஒபாமா விமர்சித்திருக்கிறார். 

ஒபாமாவின் இக்கருத்துக்கு சிவசேனா கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சிவசேனா கட்சியின் எம்.பியும், தலைமைச் செய்தித் தொடர்பாளருமான சஞ்சய் ராவத் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில்,

“ஒரு வெளிநாட்டு அரசியல் கட்சித் தலைவர், இந்திய அரசியல் கட்சித் தலைவர்கள் குறித்து இதுபோன்று கருத்துகளைக் கூற முடியாது. அவரின் கருத்துகள் வெறுக்கத்தக்கவை. நாங்கள் ஒருபோதும் ட்ரம்ப் பைத்தியக்காரர் என்று சொல்லமாட்டோம். இந்த தேசத்தைப் பற்றி ஒபாமாவுக்கு எவ்வளவு தெரியும்” எனக் கேள்வி எழுப்பினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com