தூக்க மாத்திரை உட்கொண்டாரா? ஐசியூ-வில் இருந்து திரிணாமுல் எம்.பி டிஸ்சார்ஜ்!

தூக்க மாத்திரை உட்கொண்டாரா? ஐசியூ-வில் இருந்து திரிணாமுல் எம்.பி டிஸ்சார்ஜ்!
தூக்க மாத்திரை உட்கொண்டாரா? ஐசியூ-வில் இருந்து திரிணாமுல் எம்.பி டிஸ்சார்ஜ்!

ஐசியூவில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகையும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பியுமான நுஷ்ரத் ஜஹான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

பிரபல வங்காள நடிகை நுஸ்ரத் ஜஹான், மக்களவைத் தேர்தலில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் பஷிர்ஹட் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் தனது காதலரும், தொழிலதிபருமான நிகில் ஜெயினை கடந்த ஜூன் மாதம் துருக்கியில் திருமணம் செய்துகொண்டார். 


இந்நிலையில் ஜெயினுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை பிறந்த நாள். அதைக் கொண்டாடிய நுஷ்ரத், அன்று இரவு கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அவர் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரை சாப்பிட்டதால்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்தி பரவியது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று மாலை சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். அவர் நன்றாக இருப்பதாகக் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி நுஷ்ரத்தின் குடும்பத்தினர் கூறும்போது, ‘’அவருக்கு ஆஸ்த்துமா பிரச்னை ஏற்கெனவே இருக்கிறது. ஞாயிற்றுக் கிழமை சுவாசப் பிரச்னை தீவிரமானதால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். இப்போது அவர் நலமாக இருக்கிறார். அவர் பற்றி வரும் வதந்திகளை நம்பவேண்டாம். அவர் தூக்க மாத்திரை ஏதும் சாப்பிடவில்லை’’ என்று தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com