
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,06,750 ஆக உயர்ந்துள்ளது
இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,01,139-ல் இருந்து 1,06,750 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 39,174ல் இருந்து 42,298ஆக உயந்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3163ல் இருந்து 3303ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 5,611 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் 140 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 37,136 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது; குணமடைந்தோர் எண்ணிக்கை 9,639ஆக உயர்வு; உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,325ஆக உயர்ந்துள்ளது