இந்தியா
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜன.6 வரை அவகாசம் நீட்டிப்பு
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜன.6 வரை அவகாசம் நீட்டிப்பு
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜனவரி 6ம் தேதி வரை அவகாசத்தை தேசிய தேர்வு முகமை நீட்டித்துள்ளது.
நீட் தேர்வுக்கான விண்ணப்ப அவகாசம் இன்று நள்ளிரவு 11.50 மணிக்கு நிறைவடையும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 6ம் தேதி வரை அவகாசத்தை தேசிய தேர்வு முகமை நீட்டித்துள்ளது.
ஆன் லைனில் www.nta.ac.in, ntaneet.nic.in என்ற தளங்களில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். http;//ntaneet.nic.in என்ற இணையதளத்தில் மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.