என்.டி ராமாராவின் இளைய மகள் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை

என்.டி ராமாராவின் இளைய மகள் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை

என்.டி ராமாராவின் இளைய மகள் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை
Published on

ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேச கட்சியின் நிறுவனருமான என்.டி. ராமாராவின் மகள் தற்கொலை செய்துகொண்டார்.

என்.டி. ராமாராவின் இளைய மகள் உமா மகேஸ்வரி ஹைதராபாத் ஜூபிலி ஹில்ஸிலுள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது. அவரது உடலை கைப்பற்றிய போலீசார் தற்போது அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பியுள்ளதாகவும், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்திவருவதாகவும் தகவல் தெரிவித்திருக்கிறது.

என்.டி. ராமாராவின் 8 மகன்கள் மற்றும் 4 மகள்கள் என 12 பிள்ளைகளில் உமா மகேஸ்வரி கடைசி மகள் ஆவார். இவரது இறப்பு குறித்து கேள்விப்பட்ட ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, அவரது மகன் நரா லோகேஷ் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com