"டெபிட் கார்டு வைத்திருந்தால் பணம் எடுக்கலாம்" யெஸ் வங்கி அறிவிப்பு

"டெபிட் கார்டு வைத்திருந்தால் பணம் எடுக்கலாம்" யெஸ் வங்கி அறிவிப்பு
"டெபிட் கார்டு வைத்திருந்தால் பணம் எடுக்கலாம்" யெஸ் வங்கி அறிவிப்பு

டெபிட் கார்டு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் ஏடிஎம்களில் இனி பணம் எடுக்கலாம் என்று யெஸ் வங்கி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது யெஸ் வங்கி. இந்த வங்கி சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவு வாராக் கடனால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கூடுதல் நிதி திரட்டும் முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிகள் குழுமம் யெஸ் வங்கியை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் யெஸ் வங்கியின் மோசமான நிதி நிலையை ‌கருத்தில் கொண்டு, மத்திய அரசுடன் ஆலோசனை நடத்தி அந்த வங்கி நிர்வாகத்தை 30 நாட்களுக்கு எடுத்துக் கொள்வதாக ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. மறுசீரமைப்பு அல்லது இணைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் வங்கி வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை காப்பாற்றுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.

இந்தச் சிக்கல் காரணமாக யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள் ஏடிஎம்களில் பணம் எடுக்க முடியாமல் மிகவும் சிரமத்துக்குள்ளாயினர். இந்நிலையில் நேற்று இரவு யெஸ் வங்கி தனது ட்விட்டர் பக்கத்தில் "டெபிட் கார்டு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் யெஸ் வங்கி ஏடிஎம் அல்லது பிற வங்கிகளின் ஏடிஎம்களில் இனி பணம் எடுத்துக்கொள்ளலாம். வாடிக்கையாளர்கள் பொறுமை காத்திருந்ததற்கு நன்றி" என தெரிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பினால் யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com