பாஜக ஆளும் உபியில் காவல் நிலையத்துக்கு காவி நிறம்
பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் காவல் நிலைய கட்டடம் காவி நிறத்திற்க்கு மாற்றப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநில தலைநகர் லக்னோவில் அமைந்துள்ள காவல் நிலையம் 80 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட மிகவும் பழமையானது. பொதுவாக காவல் நிலையங்களில் சிகப்பு நிறத்தில் வர்ணம் பூசப்பட்டு இருப்பது வழக்கம்.
மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அவர் எப்போதும் காவி உடையையே அணிந்து வருகிறார். இதனால், அவரது ஆலோசனையின் பேரில் அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளில் காவி நிறம் இடம்பெறுவதை வழக்கப்படுத்தி வருகிறார். இதன் தொடர்ச்சியாக, அரசு கட்டிடங்களும் காவி நிறத்துக்கு மாற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில், லக்னோ காவல் நிலையமும் காவி நிறத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து லக்னோ போலீசார் கூறுகையில், கடந்த இரண்டரை மாத காலமாக காவல் நிலையத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாகவே, காவல் நிலையத்தில் உள்ள துண்கள் மற்றும் சில பகுதிகளில் காவி நிறம் அடிக்கப்பட்டுள்ளது என கூறினர்.