ஆன்லைனில் ரயில் பெட்டியை வாடகைக்கு எடுக்கலாம் வாங்க!: ரயில்வே அறிவிப்பு
சிறப்பு ரயில்களில் ஒரு பெட்டியில் உள்ள அனைத்து இருக்கைகளையும் தனிநபர்கள் ஆன் லைன் மூலம் முன்பதிவு செய்யும் வசதியை ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.
திருமணம், சுற்றுலா உள்ளிட்டவைகளுக்கு மொத்தமாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்பவர்களுக்கு சிறப்பு ரயில்களில் மட்டுமே இருக்கைகள் ஒதுக்கப்படுகின்றன. இந்த புதிய நடைமுறையின்படி தனிநபர்கள் நேரடியாகவே வைப்புத்தொகை செலுத்தி, மொத்தமாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும் 5 சதவித புக்கிங் கட்டணம் மற்றும் சேவை வரியாக 30 சதவிதம் வசூலிக்கப்படும். இதற்கு பாதுகாப்பு வைப்பு நிதியாக ரூ. 50,000 -ஐ ரயில்வே வாரியம் நிர்ணயித்துள்ளது. முழுவதும் டிஜிட்டல் முறையில் இந்த முன்பதிவு நடைபெறும்.
முன்பெல்லாம் சிறப்பு ரயில்களில் ஒரு பெட்டியை பதிவு செய்வதற்கு ரயில்வே நிர்வாகத்திடம் எழுத்துப்பூர்வமாக கோரிக்கை கடிதம் அளிக்க வேண்டும். அவர்கள் குறிப்பிடும் டெபாசிட் தொகையை செலுத்திய பின்பு தான் டிக்கெட்டுகள் வழங்கப்படும். இந்த கடினமான நடைமுறையை ஐஆர்சிடிசி எளிதாக்கியுள்ளது.