\
முதல்முறையாக விமானத்தில் பெண் பயணிகளுக்கு இருக்கைகள் ஒதுக்கீடு

முதல்முறையாக விமானத்தில் பெண் பயணிகளுக்கு இருக்கைகள் ஒதுக்கீடு

முதல்முறையாக விமானத்தில் பெண் பயணிகளுக்கு இருக்கைகள் ஒதுக்கீடு
Published on

உலகில் முதல்முறையாக விமானத்தில் பெண் பயணிகளுக்கு இருக்கை ஒதுக்கீடு செய்ய ஏர் இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அரசு நிறுவனமான ஏர் இந்தியா உள்ளூர் மற்றும் சர்வதேச விமான சேவைகளை வழங்கி வருகிறது. அதில் உள்ளூர் விமான சேவையில் பெண் பயணிகளுக்கென பிரத்யேக இட ஒதுக்கீட்டினை வரும் 18ம் தேதி முதல் அளிக்க ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு விமானத்திலும் பெண்களுக்கு 8 இருக்கைகளை ஏர் இந்தியா ஒதுக்க இருக்கிறது. உலக அளவில் விமான நிறுவனம் ஒன்று பெண் பயணிகளுக்கு இருக்கை ஒதுக்கீடு செய்வது இதுவே முதல் முறையாகும். பெண் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த முடிவினை ஏர் இந்தியா எடுத்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com