november 8 2025 morning headlines news
rain, omni busx page

HEADLINES | கனமழை எச்சரிக்கை முதல் கேரளாவுக்கு ஆம்னி பேருந்துச் சேவை நிறுத்தம் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை முதல் கேரளாவுக்கு ஆம்னி பேருந்துச் சேவை நிறுத்தம் வரை விவரிக்கிறது.
Published on
Summary

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை முதல் கேரளாவுக்கு ஆம்னி பேருந்துச் சேவை நிறுத்தம் வரை விவரிக்கிறது.

  • தென் மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை.... கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் கனமழை பெய்யும் என கணிப்பு...

  • வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பட்டியல் தயாரிக்கும் பணிகளை கண்காணிக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.

  • கேரளாவில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக ஆம்னி பேருந்துகளுக்கு 70 லட்சம் ரூபாய் அபராதம் விதிப்பு... கேரளாவுக்கு சேவை நிறுத்தப்படுவதாகவும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு..

  • டிஜிபி நியமன விவகாரத்தில் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்... நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரிய மனுவுக்கு 3 வாரத்தில் பதில் அளிக்க உத்தரவு..

  • மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் தாமதம் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளுநர் மாளிகை மறுப்பு... 81 விழுக்காடு மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் விளக்கம்...

november 8 2025 morning headlines news
ராகுல் காந்திpt web
  • சாலைகளில் திரியும் நாய்கள் மற்றும் இதர கால்நடைகளை முகாம்களில் அடைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு... நாய்களை கண்டறிய அதிகாரிகள் தலைமையில் ரோந்து குழுவை அமைக்கவும் ஆணை...

  • மஹாராஷ்டிராவில் பட்டியல் இன மக்களுக்காக ஒதுக்கப்பட்ட அரசு நிலம் கொள்ளை அடிக்கப்பட்டதாக ராகுல்காந்தி குற்றச்சாட்டு.... முதலில் வாக்குத் திருட்டு... பிறகு நிலம் திருட்டு என பிரதமர் மீது ராகுல்காந்தி விமர்சனம்

  • ரஷ்ய ராணுவத்தில் 44 இந்தியர்கள் பணியாற்றுவதை உறுதி செய்தது மத்திய அரசு... தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வெளியுறவுத் துறை விளக்கம்...

  • அமெரிக்காவிடம் உள்ள அணு ஆயுதங்களை வைத்து 150 முறை உலகத்தை அழிக்க முடியும் என ட்ரம்ப் பேச்சு... அணு ஆயுதங்கள் தயாரிப்பிற்கு நிதி ஒதுக்க வேண்டாம் என ரஷ்யா, சீனாவிற்கு அறிவுறுத்தல்...

  • பெண்களிடம் அநாகரிகமான கேள்விகளை கேட்பது சாதாரணமானதாக மாறிவிடக்கூடாது... உடல் எடை தொடர்பான கேள்வி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நடிகை கௌரி கிஷன் வலியுறுத்தல்...

november 8 2025 morning headlines news
"பாலியல் கொடுமை எனக்கு நடக்கவில்லை: நண்பர்களின் பதிவை ஷேர் செய்திருந்தேன்" – கெளரி கிஷன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com