பத்மநாபசுவாமி கோவிலில் வழிபட ஜேசுதாசுக்கு அனுமதி

பத்மநாபசுவாமி கோவிலில் வழிபட ஜேசுதாசுக்கு அனுமதி

பத்மநாபசுவாமி கோவிலில் வழிபட ஜேசுதாசுக்கு அனுமதி
Published on

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் வழிபட, திரைப்பட பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாஸுக்கு அனுமதிதருவது என கோயிலின் செயற்குழு முடிவு செய்துள்ளது. 

ஜேசுதாஸின் கோரிக்கையை ஏற்று, இந்த அனுமதியை அளித்திருப்பதாக கோயிலின் செயற்குழு தெரிவித்துள்ளது. முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில அறநிலையத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், கடவுளை நம்புவோருக்கு கோயிலில் இடமளிக்க வேண்டுமென்பதுதான் அரசின் கொள்கை எனக் கூறியிருந்தார்.

ஜேசுதாஸ் பிறப்பால் கிறிஸ்துவராக இருந்தாலும் ஐயப்பனின் பாடல்கள் உள்பட பல இந்து கடவுள்களின் பாடல்களை மனமுருகி பாடியுள்ளார். அதுமட்டுமின்றி சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலுக்கும், கர்நாடக மாநிலத்தில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலுக்கும் அவர் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com