பிரபல சாக்சபோன் இசைக் கலைஞர் கத்ரி கோபால்நாத் காலமானார்

பிரபல சாக்சபோன் இசைக் கலைஞர் கத்ரி கோபால்நாத் காலமானார்

பிரபல சாக்சபோன் இசைக் கலைஞர் கத்ரி கோபால்நாத் காலமானார்
Published on

பிரபல சாக்சபோன் கலைஞர் கத்ரி கோபால்நாத் உடல்நலக்குறைவு காரணமாக மங்களூரில் இன்று காலமானார். அவருக்கு வயது 69.

கத்ரி கோபால்நாத், கர்நாடகா மாநிலம் மங்களூருவில் 1949- ஆம் ஆண்டு பிறந்தார். இவர் கோபாலகிருஷ்ண ஐயர் என்பவரிடம் சாக்சபோன் கற்றார். சென்னையில் பிரபல மிருதங்க இசைக்கலைஞர் டி.வி. கோபாலகிருஷ்ணனிடம் இசைப்பயிற்சி பெற்றார். இவரது இசை சேவையை பாராட்டி மத்திய அரசு, கடந்த 2004- ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. அதேபோல் தமிழக அரசும் கலைமாமணி விருது வழங்கி பெருமைப்படுத்தி உள்ளது. ஏராளமான விருதுகளையும் பட்டங்களையும் பெற்றுள்ள இவர், பல்வேறு நாடுகளில் இசை கச்சேரி நடத்தியுள்ளார். 

கே.பாலசந்தர் இயக்கிய ’டூயட்’ படத்தில் ஏ.ஆர்.ரகுமானுடன் இணைந்து பணியாற்றியிருந்தார். அந்த படத்தின் அனைத்துப் பாடல்களிலும் இவரது சாக்சபோன் இசை பயன்படுத்தப்பட்டது. 

கடந்த சில நாட்களாக உடல் நலமில்லாமல் இருந்த அவர், மங்களூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார். அவரது ஒரு மகன் வெளிநாட்டில் இருக்கிறார். அவர் வந்ததும் இறுதிச் சடங்கு நடக்க இருக்கிறது. 

மறைந்த கத்ரி கோபால்நாத்துக்கு கர்நாடக இசைக் கலைஞர்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com