“பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு பேரிடர்”- ஆர்பிஐ முன்னாள் ஆளுநர்..!

“பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு பேரிடர்”- ஆர்பிஐ முன்னாள் ஆளுநர்..!
“பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு பேரிடர்”- ஆர்பிஐ முன்னாள் ஆளுநர்..!

பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அரசு தவறான விதத்தில் கையாண்டதாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் தெரிவித்துள்ளார். 

ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் ‘டெக்கன் ஹெரால்ட்’இணையதளத்திற்கு ஒரு நேர்காணல் அளித்துள்ளார். அதில் தற்போதைய பொருளாதார நிலை குறித்தும், அரசின் நடவடிக்கைகள் குறித்தும் அவர் சில கருத்துகளை தெரிவித்துள்ளார். அதில், “தற்போது இந்திய பொருளாதாரத்தில் நிலவும் மந்த நிலையை தவிர்க்க அரசு தனது தரப்பில் செய்யப்படும் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும். மேலும் அந்த முதலீடுகள் ஒரு நீண்ட கால கட்டுமானம் உள்ளிட்டவற்றில் இருக்க வேண்டும். 

பணிமதிப்பிழப்பு நடவடிக்கை கருப்பு பணத்தை கண்டறிய எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும். எனினும் இந்த நடவடிக்கையை அரசு நிர்வாகம் தவறாக கையாண்டது. ஏனென்றால், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பு அரசு தேவையான அளவு புதிய நோட்டுகளை அச்சடித்து வைத்திருந்தால் இந்த நடவடிக்கையினால் எந்தப் பிரச்னையும் வந்திருக்காது. அவ்வாறு அரசு நிர்வாகம் செய்யாததால் புதிய பணம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் சிறிய வணிகம் செய்பவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். 

அத்துடன் குறைந்த சம்பளம் வாங்கும் பலர் தங்களின் வேலைகளை இழக்க நேரிட்டது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை கருப்பு பணத்தை ஒழித்ததா என்பது எனக்கு சரியாக தெரியவில்லை. ஆனால் அந்த நடவடிக்கை என்னை பொறுத்தவரை ஒரு பெரிய பேரிடர் முடிவாக இருந்தது. அதேபோல ரிசர்வ் வங்கிக்கு எந்த விஷயங்களில் தனி அதிகாரம் அளிக்க வேண்டும் என்பதில் அரசு ஒரு முடிவுக்கு வரவேண்டும். அப்போது தான் அந்த விஷயங்களில் ரிசர்வ் வங்கி தனிச்சையாக முடிவு எடுக்க முடியும். இந்த விஷயங்களை அரசு வரையறுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com