இந்தியா
மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல்: சிவசேனாவை பின்னுக்கு தள்ளிய ‘நோட்டா’
மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல்: சிவசேனாவை பின்னுக்கு தள்ளிய ‘நோட்டா’
மகாராஷ்டிராவில் அரசியல் கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளி, 'நோட்டா' இரண்டாவது இடம் பிடித்த அரிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
லத்தூர் ஊரக தொகுதியில், காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதலமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்மிக்கின் இளைய மகன் தீரஜ் தேஷ்முக் போட்டியிட்டார். அவரை எதிர்த்து சிவசேனாவின் ரவி ராம்ராஜே களமிறங்கினார். தேர்தல் முடிவில், தீரஜ் தேஷ்முக் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 615 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ரவி ராம்ராஜே 13 ஆயிரத்து 459 வாக்குகள் மட்டுமே பெற்றார்.
இந்தத் தொகுதியில் சிவசேனா வேட்பாளரை விட, நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்தன. யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்ற நோட்டா பொத்தானை, 27 ஆயிரத்து 449 பேர் பயன்படுத்தியுள்ளனர். சிவசேனா வேட்பாளர் 13 ஆயிரத்து 459 வாக்குகள் பெற்றார்.