இந்தியா
வட மாநிலங்களில் தொடர்ந்து அரங்கேறும் தலைமுடி வெட்டும் சம்பவம்
வட மாநிலங்களில் தொடர்ந்து அரங்கேறும் தலைமுடி வெட்டும் சம்பவம்
பெண்கள் தலைமுடியை வெட்டி செல்லும் விநோத சம்பவம் வட மாநிலங்களில் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
டெல்லி, ஹரியானா, குஜராத், உத்தரப்பிரதேச மாநிலங்களில் நிகழ்ந்து வந்த இந்த சம்பவம் மகாராஷ்ட்ரா மாநிலத்திற்கும் பரவியுள்ளது. மகாராஷ்ட்ரா மாநிலம் அவுரங்காபாத்தில் இரு வேறு இடங்களில் பதின்ம வயது பெண்களின் தலை முடி வெட்டப்பட்டுள்ளது. தூங்கி எழுந்து பார்த்த போது தங்களின் தலைமுடி வெட்டி கீழே வீசப்பட்டிருந்ததாக பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். யார் இந்தச் செயலில் ஈடுபட்டது, எதற்காக இப்படி செய்தார்கள் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளதால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலீசார் திணறிவருகின்றனர். எனினும் இந்த சம்பவம் அப்பகுதி பெண்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.