இந்தியா
வடகொரியா - பாக். தொடர்பு குறித்து விசாரிக்க வேண்டும்: சுஷ்மா
வடகொரியா - பாக். தொடர்பு குறித்து விசாரிக்க வேண்டும்: சுஷ்மா
வடகொரியாவுக்கு அணு ஆயுத உதவி வழங்கும் நாட்டின் தொடர்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பாகிஸ்தானை மறைமுகமாக சுட்டிக்காட்டி வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வலியுறுத்தியுள்ளார்.
ஐ.நா. பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்றுள்ள சுஷ்மா ஸ்வராஜ், அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்டு வெளியுறவு அமைச்சர்களை சந்தித்து முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது வடகொரியா நடத்தி வரும் அணு ஆயுத சோதனைக்கு கண்டனம் தெரிவித்த அவர், அந்நாட்டுக்கு அணு ஆயுத உதவி வழங்கும் நாட்டின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். வடகொரியாவுக்கு, பாகிஸ்தான் அணு ஆயுதம் தொடர்பான உதவிகளை அளித்து வருவதையே சுஷ்மா சூசகமாக குறிப்பிட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.