வட மாநிலங்களில் இன்று நடைபெற்ற இருவேறு விபத்துகளில் 18 பேர் உயிரிழந்தனர்.
மகாராஷ்ட்டிரா மாநிலம் புனேவிலிருந்து லத்தூர் என்ற இடத்திற்கு தனியார் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த பேருந்து பீட் நகர் என்ற இடத்தில் வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே, உத்திரபிரதேச மாநிலம் மதுராவில் உள்ள ஆற்றில் சொகுசு கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 9 பேர் பலியாகினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.