வெளிநாடு வாழ் இந்தியர்களும் UPI மூலம் பணம் அனுப்பலாம்! எப்படியென இங்கே தெரிஞ்சுகோங்க!

வெளிநாடு வாழ் இந்தியர்களும் UPI மூலம் பணம் அனுப்பலாம்! எப்படியென இங்கே தெரிஞ்சுகோங்க!
வெளிநாடு வாழ் இந்தியர்களும் UPI மூலம் பணம் அனுப்பலாம்! எப்படியென இங்கே தெரிஞ்சுகோங்க!

சவுதி அரேபியா, அமெரிக்கா, சிங்கப்பூர், கத்தார் முதலிய பத்து வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள், இனி UPI மூலம் பணப்பரிவர்த்தனை செய்யலாம் என அறிவித்துள்ளது இந்தியாவின் தேசிய பண பரிவர்த்தனை நிறுவனம்.

மற்ற நாடுகளில் உள்ள இந்தியர்கள் விரைவில் தங்கள் சர்வதேச மொபைல் எண்களைப் பயன்படுத்தி UPI சேவையை பயன்படுத்த முடியும் என்று அறிவித்துள்ளது, இந்திய தேசிய பண பரிவர்த்தனை நிறுவனம். UPI பண பரிவர்த்தனை சேவையானது தற்போது நவீனமயமாகி வருகிறது. அனைத்து மொபைல் பயன்பாட்டாளர்களும் கிட்டத்தட்ட தங்களது அனைத்து பணபரிவர்த்தனைகளையும், பணப்பரிமாற்றங்களையும் UPI சேவை மூலமே செயல்படுத்தி வருகின்றனர். மேலும் ரொக்கப்பண பரிமாற்றம் என்பது அதிகளவில் இல்லாமல், தற்போது டிஜிட்டல் பரிமாற்றமே ஷாப்பிங் மால், சூப்பர் மார்க்கெட், சினிமா தியேட்டர், பெரிய கடைகள் தொடங்கி இளநீர் கடை வரையிலான சிறிய கடைகள் வரை அதிகமாக மக்கள் பயன்பாட்டிற்கு வந்து சேர்ந்துள்ளது.

இந்த மாதிரியான டிஜிட்டல் காலமாற்றங்களில் கூட வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டில் வேலை செய்து வரும் இந்தியர்கள், தங்கள் உறவினர்களுக்கு பணம் அனுப்புவதிலோ அல்லது வேறு ஏதாவது அவரச பணப்பரிமாற்றத்தின் போதோ பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதனால் இதற்கான டிஜிட்டல் பரிமாற்றத்தை விரைவில் இந்தியாவில் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாகவே வெளிநாடு வாழ் இந்தியர்களால் வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அந்த சிரமத்திற்கு எல்லாம் தற்போது மாற்றுவழியை ஏற்படுத்தியுள்ளது மத்திய அரசு. இனி வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தங்களின் வெளிநாட்டு கைபேசி எண்களையே பயன்படுத்தி, இந்திய வங்கி கணக்குகளுக்கு மொபைல் பணப் பரிவர்த்தனை செயலியான யுபிஐ மூலம், இனி ரூபாயில் பண பரிவர்த்தனை செய்யலாம் என்றும், விரைவில் இந்த சேவை தொடங்கப்பட உள்ளது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் முன்மாதிரியாக இது சிங்கப்பூர், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, ஹாங்காங், ஓமன், கத்தார் மற்றும் இங்கிலாந்து ஆகிய 10 நாடுகளில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும், பின்னர் அடுத்தடுத்து மற்ற நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஒரு சுற்றறிக்கை வெளியிட்டிருக்கும் இந்திய தேசிய பண பரிவர்த்தனை நிறுவனமானது, அந்த சுற்றறிக்கையில் "UPI பயன்பாட்டாளர்களை இந்திய மொபைல் எண் அல்லாமல், அந்தந்த நாட்டில் இருக்கும் எண்களை வைத்து டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த அனுமதியளிக்கும் வழிமுறையை பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டது. அந்தவழிமுறையின் படி, வெளிநாட்டுவாழ் இந்தியர்கள், அவர்களின் சர்வதேச மொபைல் எண்ணுடன் என்ஆர்இ மற்றும் என்ஆர்ஓ வங்கி கணக்குகளை இணைத்துகொள்ள வேண்டும். அதன்மூலம் மொபைல் UPI மூலம் டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் செய்துகொள்ள முடியும்” என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும், “ஏப்ரல் 30ஆம் தேதி வரைக்குமான கால அவகாசத்திற்குள் இந்த பயன்பாட்டினை, அறிவிக்கப்பட்டிருக்கும் வழிமுறையில் இணைத்துக்கொள்ள வேண்டும். அந்தந்த நாடுகளின் முதல் கோட் நம்பர்களை வைத்து பணப்பரிமாற்றத்திற்கான அனுமதி அளிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து பேசியிருக்கும் சர்வத்ரா டெக்னாலஜிஸ் நிறுவனரான மாந்தர் ஆகாஷே, “என்ஆர்ஐ ஆன வெளிநாடு வாழ் இந்தியர்கள், தங்களுடைய சர்வதேச சிம்முடன் இணைக்கப்பட்டுள்ள என்ஆர்இ மற்றும் என்ஆர்ஓ கணக்குகளை UPI உடன் இணைத்து கொள்ளவேண்டும். அதன்மூலம் மற்ற இந்திய பயனாளர்களைப் போலவே வணிக கட்டணத்துடன் வங்கிகளுக்கு இடையேயான பணபரிமாற்றத்தை செய்துகொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com