பாலியல் துன்புறுத்தலுக்கு மறுத்த சிறுவனுக்கு, திருமணமான பெண் ஒருவர் செய்துள்ள கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் அந்தரங்க உறுப்பு மீது கம்பியால் சூடு வைத்த அந்த பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
டெல்லியை அடுத்த நொய்டா அருகேயுள்ள சப்ரவுலா கிராமத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தனக்கு நேர்ந்த சம்பவத்தை தனது தாயிடம் அந்த சிறுவன் கூறியுள்ளான். அந்த தாய் இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தன்னுடைய பக்கத்து வீட்டில் உள்ள அந்த பெண், தொடர்ச்சியாக அத்துமீறலில் ஈடுபட்டிருந்ததாக புகாரில் கூறியுள்ளார்.
குற்றம்சாட்டப்பட்டுள்ள அந்த பெண் தலைமறைவாகியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த பெண் மீது போக்ஸோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.