நொய்டா | ஹோலி பண்டிகை நாளில் ஏற்பட்ட துயரம்.. மரக்கிடங்கில் 5 நாட்களாக கொழுந்துவிட்டு எரிந்த தீ!

ஹோலி பண்டிகையின் போது நொய்டாவின் குப்பை கொட்டும் இடத்தில் ஏற்பட்ட தீயானது சுமார் 100 மணி நேரத்திற்கு பிறகு நேற்று அணைக்கப்பட்டது.
நொய்டாவில் ஏற்பட்ட தீ
நொய்டாவில் ஏற்பட்ட தீANI

நொய்டா நகரில் கடந்த திங்கள்கிழமையன்று ஹோலிப் பண்டிகையானது கொண்டாடப்பட்டது. தொடர்ந்து அன்று மாலை ஆறு மணியளவில் அப்பகுதியில் உள்ள செக்டார் 32 என்ற ப்ளாட் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இத்தீயானது அருகில் இருந்த தோட்டக்கலைதுறைக்கு சொந்தமான, மரக்கிடங்கிங்கிலும் பரவியுள்ளது.

நொய்டா தீ விபத்து
நொய்டா தீ விபத்து

இந்த மரக்கிடங்கில் தோட்டக்கலைக்கு சொந்தமான மரங்கள் மற்றும் காய்ந்த சருகுகள் ஆகியன சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சேமித்து வைக்கப்பட்டிருந்தன. அதில் பரவ ஆரம்பித்த தீயானது ஒருகட்டத்தில் கொழுந்துவிட்டு எரியத்தொடங்கியுள்ளது. அப்பகுதியில் ஏற்கெனவே முன்னெச்சரிக்கையாக இரண்டு தண்ணீர் லாரிகள் நிறுத்தப்பட்டிருந்தன. ஆனாலும் கிடங்கில் ஏற்பட்ட தீயானது மளமளவெனப் பரவியது. இதனால் கூடுதலாக நீர் தேவைப்பட்டுள்ளது.

நொய்டாவில் ஏற்பட்ட தீ
Wow! நிலவின் இரவில் விழித்தெழுந்த ஸ்லிம் விண்கலம்; போட்டோ வந்ததும் ஜப்பான் விஞ்ஞானிகள் ஹேப்பி!

நிலைமையின் தீவிரத்தை தெரிந்துக்கொண்ட தீயணைப்புத்துறையின் தலைமை அதிகாரியான பிரதீப்குமார் தலைமையிலான குழுவினர், தண்ணீர் டெண்டர்கள் மூலம் தண்ணீர் லாரிகளை வரவழைத்து சுமார் 100 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு அதாவது 5 நாட்களுக்குப்பிறகு வெள்ளிக்கிழமையான நேற்று தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

தீ விபத்து
தீ விபத்து

விபத்து குறித்து அதிகாரி பிரதீப்குமார் கொடுத்த விளக்கம் ஒன்றில், “மரக்கிடங்கில் ஏற்பட்ட தீயானது மளமளவென சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு பரவி கொழுந்துவிட்டு எரியத்தொடங்கியது. அதை கட்டுப்படுத்த சுமார் 150 தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர், தண்ணீரை பீய்ச்சி அடித்தாலும் மரங்களுக்கு அடியில் இருந்த நெருப்பானது மீண்டும் மீண்டும் எரியத்தொடங்கியது.

ஆகையால், ஜேசிபி உதவியில் கயிற்றை கட்டிக்கொண்டு தீயணைப்பு வீரர்கள் மிகவும் சிரமம் கொண்டு தீயை அணைத்தனர். இதற்காக 15 டெண்டர்கள் மூலம் 35 லட்சம் லிட்டர் தண்ணீர் வரவழைக்கப்பட்டு, ஐந்து நாட்கள் போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தோம்” என்று கூறினார்.

தொடர்ந்து தண்ணீர் லாரிகள் மற்றும் மணல் அள்ளும் இயந்திரங்கள் அவ்விடத்தில் தற்போது நிறுத்திவைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com