\
நொய்டா இரட்டை கொலை: 15வயது சிறுவன் கைது

நொய்டா இரட்டை கொலை: 15வயது சிறுவன் கைது

நொய்டா இரட்டை கொலை: 15வயது சிறுவன் கைது
Published on

நொய்டாவில் தாய், மகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் காணாமல்போன 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நொய்டாவை சேர்ந்த தொழிலதிபர் சவுமியா அகர்வால். இவர் கடந்த 3ஆம் தேதி தொழில் நிமத்தமாக குஜராத் சென்றுள்ளார். வீட்டில் மனைவி அஞ்சலி, மகள் மணிகர்னிகா, மகன் பிராகர் ஆகியோர் இருந்துள்ளனர்.இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு முதல் இவரது குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். ஆனால்  ஃபோன் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது. இதனையடுத்து சவுமியா அகர்வால் தனது உறவினரான விராத்தை தொடர்பு கொண்டு, வீட்டைச் சென்று பார்க்குமாறு தெரிவித்துள்ளார்.

விராத் அங்குள்ள காவல் நிலையத்தில் இதுதொடர்பாக தெரிவித்து அவர்களுடன் வீட்டுக்கு சென்றுள்ளார். வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது அஞ்சலி (43), மகள் மணிகர்னிகா (11) ஆகியோர் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிய வந்தது. 15 வயது சிறுவன் பிராகரை காணவில்லை. காவல்துறையினருக்கு அவன் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவனை தேடினர். வீட்டிற்கு வெளியே இருந்த சிசிடிவி கேமராவில் பிராகர் ஒரு பையை எடுத்து செல்வது பதிவாகியுள்ளது. மேலும் வீட்டு லாக்கரில் இருந்த 2 லட்சம் ரூபாயை காணவில்லை என சிறுவனின் தந்தை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது அந்த சிறுவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிறுவன் கைது செய்யும்போது தனியாக இருந்ததாகவும் அவன் பயந்த நிலையில் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. படுகொலை செய்ததை ஒப்புக்கொண்டானா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த காவல்துறையினர், விசாரணைக்கு பிறகு இதுகுறித்து தெரிவிக்கப்படும் என கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com