சர் சி.வி.ராமன் வீட்டில் கொள்ளை!

சர் சி.வி.ராமன் வீட்டில் கொள்ளை!

சர் சி.வி.ராமன் வீட்டில் கொள்ளை!
Published on

நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி, சர் சி.வி.ராமன் வீட்டில் 2 சந்தன மரங்கள் வெட்டி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சர் சி.வி.ராமன் வீடு, பெங்களூரு மல்லேஸ்வரத்தில் இருக்கிறது. அவர் மறைவுக்குப் பிறகு இந்த வீட்டை கர்நாடக அரசு பராமரித்து வருகிறது. இங்கு ஏராளமான மரங்கள் உள்ளன. வீட்டைப் பாதுகாக்க செக்யூரிட்டிகள் உள்ளனர். நேற்று இரவு இங்கு வந்த முகமூடி அணிந்த 6 பேர் கொண்ட கும்பல், கத்தியை காட்டி செக்யூரிட்டிகளை மிரட்டிவிட்டு, அங்கிருந்த 2 சந்தன மரங்களை வெட்டினர். பின்னர் அதைத் துண்டுகளாக்கி வாகனத்தில் ஏற்றி கடத்திச் சென்றனர். 
இதுபற்றி செக்யூரிட்டிகள் சீனிவாஸ் மற்றும் கங்காதர் ஆகியோர் மல்லேஸ்வரம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தினர். சந்தன மரத்தை வெட்டியவர்கள் தமிழில் பேசியதாகக் கூறப்படுகிறது. போலீசார் அவர்களைத் தேடி வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com